தீர்ப்பு வரட்டும் பார்க்கலாம்; முன்பே ஒரு முடிவுக்கு வரவேண்டாம்: சசிகலா

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக உள்ளனர் என்றும் யாரும் அடைத்து
தீர்ப்பு வரட்டும் பார்க்கலாம்; முன்பே ஒரு முடிவுக்கு வரவேண்டாம்: சசிகலா

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக உள்ளனர் என்றும் யாரும் அடைத்து வைக்கபடவில்லை என்று கூறிய சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரட்டும் பார்க்கலாம் என்று கூறினார்.

கூவத்தூரில் அதிமுக. எம்எல்ஏக்களுடன் 2வது நாளாக ஆலோசனை நடத்திய பிறகு சசிகலா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

எம்எல்ஏக்கள் யாரையும் அடைத்து வைக்கவில்லை. இதை நீங்கள் கண்கூடாக பார்க்கிறீர்கள். நல்ல குடும்பமாக இங்கே இருக்கிறார்கள். அதில் இருந்தே நீங்கள் புரிந்த கொள்ளலாம். அடைத்து வைத்து இருக்கிறோம் என்று சொன்னார்கள். நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் அவர்கள் எவ்வளவு சுதந்திரமாக தங்கள் தனது மனதில் உள்ளதை சொல்லிக்கொண்டு, அதிமுகவு எந்த பங்கமும் வந்து விடக்கூடாது என்பதில் முனைப்பாக உள்ளனர்.

எம்ஏல்ஏக்களின் பெண் குழந்தைகளை தூக்கி சென்று விடுவோம் என்று மிரட்டுவதாக சொன்னார்கள். இருந்தாலும் அவர்கள் சொன்னது, இந்த இயக்கத்திற்காக உறவினர்களிடம் சொல்லி எங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளோம் என்று என்னிடம் கூறியபோது, அவர்கள் இந்த இயக்கத்தின் மீது எவ்வுளவு பற்றாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து என் கண்களில் கண்ணீர் வந்தது என்றார்.

செய்தியாளர் கேள்வியும் சசிகலா பதிலும்:
செய்தியாளர்கள்: ஆட்சி அமைக்க காலதாமததற்கு என்ன காரணம்?
சசிகலா: உங்களை போல தான் நானும் நினைக்கின்றேன். காரணம் ஊர் அறிய தெரிந்து இருக்கும். உங்களுக்கும் தெரிந்து இருக்கும்.

செய்தியாளர்கள்: உங்களுக்கு எவ்வளவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக உள்ளனர்?
சசிகலா: நீங்களே எண்ணி பார்த்துக் கொள்ளுங்கள்.

செய்தியாளர்கள்: பெரிய சக்தி இருப்பதாக சொல்லுகிறீர்கள். அது எந்த சக்தி?
சசிகலா: அந்த சக்தி உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். (எல்லோரும் நீங்கள் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்? என்றார்) நீங்கள் புத்திசாலி தானே என்றார்.

செய்தியாளர்கள்: எல்.எல்.ஏ.க்கள் தங்கியிருப்பது தொடர்பான மற்றொரு கேள்விக்கு...
சசிகலா: உங்களுக்கு ஏதோ தகவல் கிடைத்து இருக்கிறதோ? நீங்கள் பத்திரிக்கை என்றார்.

செய்தியாளர்கள்: உங்களுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை?
சசிகலா: நீங்களும் பார்க்க தானே போகிறீர்கள். நீங்களும் இங்கே தானே இருக்கிறீர்கள். பொறுத்து இருந்து பாருங்கள் என்றார்.

செய்தியாளர்கள்: ஆட்சி அமைப்பது சம்மந்தமாக ஆளுநர் நிராகரித்துவிட்டார் என்ற செய்தி தொடர்பான கேள்விக்கு...
சசிகலா: அந்தமாதிரியான செய்தி பொய் என்று ஏற்கனவே, ஆளுநர் மாளிகை விளக்கிவிட்டதே என்றவர் இதுமாதிரியான செய்தியை வெளியிடுபவர்கள் யார் என்று தெரியும். எங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டு செயல்படுகிறார்கள். அதனை நன்றாக உணர்ந்தவர்கள் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள், அவர்களுக்கு தெரியும் என்று கூறினார்.

செய்தியாளர்கள்: போராட்டம் என்று சொல்லியிருந்தீர்களே?
சசிகலா: அதற்கு உண்டான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறோம்.

செய்தியாளர்கள்: சொத்துக்குவிப்பு தீர்ப்பு தொடர்பான கேள்விக்கு...
சசிகலா: தீர்ப்பு வரட்டும் பார்க்கலாம். வருவதற்கு முன்பே ஏன் ஒரு முடிவுக்கு வருகிறீர்கள் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com