பன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்ட நிலை எம்எல்ஏக்களுக்கு ஏற்படாது என்பதற்கு என்ன உறுதி: வானதி சீனிவாசன்

தன்னை மிரட்டி தான் பதவி விலக செய்ததாக முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இதே நிலை சட்டப்பேரவை
பன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்ட நிலை எம்எல்ஏக்களுக்கு ஏற்படாது என்பதற்கு என்ன உறுதி: வானதி சீனிவாசன்

கோவை: தன்னை மிரட்டி தான் பதவி விலக செய்ததாக முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இதே நிலை சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஏற்படாது என்பதற்கு எவ்வாறு உறுதியளிக்க முடியும் என்று பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் சரியானதாக இல்லை. எனவே தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் முடிவு எடுப்பார்.

அதே நேரத்தில் தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலுக்கு பாஜக காரணம் என கூறுவது ஏற்புடையது இல்லை.

 இந்த குழப்பங்களுக்கு பாஜக பின்னணி இருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறி இருப்பது கண்டனத்துக்குரியது. மேலும் புறவாசல் வழியாக தமிழகத்திற்கு நுழைய வேண்டிய அவசியம் பாஜக-விற்கு இல்லை.

 குற்றப்பின்னணி உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, முதல்வராக பதவி ஏற்பது என்பது ஏற்புடையது இல்லை. வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களை விடுதியில் அடைத்து வைத்துள்ளது முறையானது இல்லை.

 தன்னை மிரட்டி தான் பதவி விலக செய்ததாக முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இதே நிலை சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஏற்படாது என்பதற்கு எவ்வாறு உறுதியளிக்க முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com