104 நானோ செயற்கைக்கோள்களுடன் பிப். 15-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி- 37 ராக்கெட்!

பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் மூலம், 104 நானோ செயற்கைக்கோள்கள் பிப்ரவரி 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 15-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 15-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட்.

பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் மூலம், 104 நானோ செயற்கைக்கோள்கள் பிப்ரவரி 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்த பிஎஸ்எல்வி சி}37 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 15ஆம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில், 39-ஆவது ராக்கெட் இதுவாகும். இந்த ராக்கெட் இந்தியாவின் 714 கிலோ எடைகொண்ட கார்டோசாட் வரிசையின் 2ஆவது செயற்கைக்கோளையும் சுமந்து செல்கிறது. கார்டோசாட்-2 செயற்கைக்கோள் பூமியை படமெடுக்கவும், கடல் வழி போக்குவரத்தை கண்காணிக்கவும், நீர்வள மேம்பாட்டுக்கும், காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கவும் உதவும். இந்தியாவின் இரண்டு நானோ செயற்கைக்கோள்களான ஐ.என்.எஸ் 1ஏ, ஐ.என்.எஸ்.1பி ஆகியவையும் இதில் அடங்கும்.
இத்துடன் இணைந்து, 664 கிலோ மொத்த எடை கொண்ட மற்ற நாடுகளின் 103 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படவுள்ளன.
இதில் இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளின் தலா ஒரு நானோ செயற்கைக்கோளுடனும், அமெரிக்காவில் இருந்து மொத்தம் 96 நானோ செயற்கைக்கோள்களுடன் பயணிக்கவுள்ளது பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட். இந்த நானோ செயற்கைகோள்கள் ஒவ்வொன்றும், 5 முதல் 10 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
இந்த ராக்கெட்டுக்கான 48 மணி நேரத்துக்கான கவுண்ட் டவுன், பிப்ரவரி 13ஆம் தேதி காலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு, 2014ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 37 செயற்கைக்கோள்களை ரஷியா செலுத்தியது தான், இப்போதைய சாதனையாக இருக்கிறது. இஸ்ரோ தரப்பில், இதற்கு முன்பு 20 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
பாகிஸ்தானை பதற வைத்த கார்டோசாட்: பாகிஸ்தானை பதற வைத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலுக்கு இஸ்ரோவின் கார்டோசாட்-2சி செயற்கைக்கோள் உதவியது. அந்தத் தாக்குதலுக்கு, இஸ்ரோ சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி ஏவப்பட்ட கார்டோசாட்-2சி செயற்கைக்கோள் பங்குதான் அதிகம் என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.
கார்டோசாட் விவரம்: கார்டோசாட் செயற்கைக்கோள்கள் 2005ஆம் ஆண்டு முதல் விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன.
2007 ஆம் ஆண்டு ஏவப்பட்ட கார்டோசாட்-2ஏ செயற்கைக்கோள்தான் பக்கத்து நாடுகள் விண்ணில் ஏவும் செயற்கைக்கோள்களை கண்காணித்தது.
2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி ஏவப்பட்ட கார்டோசாட்-2சி தான் சூரிய வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, பூமியை கண்காணிக்கும் வகையில் அனுப்பப்பட்டது.
மேலும், மின்காந்த நிறமாலையில் செயல்படும் வகையில் சிறப்பு கேமிரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.
விநாடி துளிகளில் பூமியின் எந்த பகுதியையும் மிகவும் தெளிவாக படம் பிடித்து தள்ளும் சிறப்புமிக்கது. முக்கியமான பகுதிகளை வீடியோவாகவும், நீண்ட புகைப்படமாகவும் எடுக்கும் திறன் படைத்தது. பூமியில் எந்த ஒரு பகுதியையும் தெளிவுடன் உயர் தொழில்நுட்பத்தில் படம் பிடித்து அனுப்ப கூடியது இந்தச் செயற்கைக்கோள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com