அதிமுகவையும், அரசையும் உடைக்க முயற்சி: ஓ.எஸ். மணியன்

அதிமுகவையும், தமிழக அரசையும் உடைக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்து வருவதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவையும், அரசையும் உடைக்க முயற்சி: ஓ.எஸ். மணியன்

அதிமுகவையும், தமிழக அரசையும் உடைக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்து வருவதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பேணி பாதுகாத்த அதிமுக எனும் இயக்கத்தையும், அரசையும் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வோடு பொதுச் செயலர் வி.கே. சசிகலா செயல்பட்டு வருகிறார்.
அரசையும், அதிமுகவையும் கெடுக்க வேண்டும் என்ற உணர்வோடு, உடைக்க வேண்டும், ஆட்சியைப் பறிக்க வேண்டும், அதிமுக அரசை கெடுக்க வேண்டும் என்ற உணர்வோடு ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார்.
நான்கரை ஆண்டுகள் இன்னமும் இருக்கக் கூடிய ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 127 எம்எல்ஏக்கள் சசிகலாவை முதல்வாராக்க வேண்டும் எனவும், அதிமுக அரசை காப்பாற்ற வேண்டும் என்றும் முடிவாக இருக்கிறோம்.
ஆனால், ஒருசிலரை வைத்துக் கொண்டு, அதிமுக அரசை எப்படி கெடுப்பது என்ற ஒரே நோக்கத்தோடு ஓ.பி.எஸ்., செயல்படுகிறார். 127 எம்எல்ஏக்களும் இருக்கிறோம். பேரவைத் தலைவரும் இருக்கிறார். ஆளுநர் அழைத்தால் உடனடியாக ஆட்சி அமைப்போம். அவரும் அழைப்பார்.
சசிகலாவின் பேச்சு உந்துதலாக இருக்கிறது: எம்எல்ஏக்களிடம் சசிகலா பேசிவிட்டுச் சென்றார். இன்றைக்கும் வந்தார். சிறந்த பயிற்சியை அளிக்கிறார். அது சிறந்த வகுப்பாக அமைகிறது. உந்துதலாக இருக்கிறது.
ஆட்சி அமைக்க முடியாது என்ற பேச்சுக்கே இடமில்லை. 135 எம்எல்ஏக்களில் 127 பேர் சசிகலாவை ஆதரிக்கின்றனர். 7 எம்எல்ஏக்களை ஓ.பன்னீர்செல்வம் வைத்திருக்கிறார். அவர் எப்படி ஆட்சி அமைக்க முடியும். யாரை நம்பி ஆட்சி அமைக்க முடியும். கட்சியைக் கெடுப்பதற்காக இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டிய ஆண்டு இது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். மக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய ஆக்கப்பூர்வ பணிகள் நிறைய இருக்கின்றன. வறட்சிக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும். நிலையான, அதிகாரம் பெற்ற முதல்வர் வேண்டும்.
இவையெல்லாம் தடைபட்டுக் கிடக்கிறது. பொதுச் செயலாளர் முதல்வராகி விரைவில் அந்தப் பணிகளைத் தொடர்வார். இது 100 சதவீதம் நிறைவேறும் என்றார் ஓ.எஸ்.மணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com