அலங்காநத்தம் ஜல்லிக்கட்டு: 500 காளைகள் பங்கேற்பு

அலங்காநத்தம் ஜல்லிக்கட்டு போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளைப் பிடிக்க முயன்ற 20 பேர் காயமடைந்தனர்.
காளைகளைப் பிடிக்க முயன்ற வீரர்கள்.
காளைகளைப் பிடிக்க முயன்ற வீரர்கள்.

அலங்காநத்தம் ஜல்லிக்கட்டு போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளைப் பிடிக்க முயன்ற 20 பேர் காயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், எருமபட்டி அருகே அலங்காநத்தம் கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்துக் கொடியசைத்துப் போட்டியைத் தொடக்கி வைத்தார்.
மாடுபிடி வீரர்களுக்கு அரசின் விதிமுறைகளின்படி மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அதேபோல, ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளையும் கால்நடை மருத்துவக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்டு, பதிவு வரிசையின் அடிப்படையில் பாதுகாப்பாக வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்டன. மாலை 4 மணிக்குப் போட்டி முடிவடைந்தது.
அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காளைகளைப் பிடிக்க முயன்றனர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கு குடம், பேசன், தங்க, வெள்ளிக் காசுகள் உள்ளிட்டவை பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டின்போது காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்ட வீரர்களுக்குப் போட்டி நடைபெற்ற இடத்திலேயே மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முன்னதாக ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெபராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com