ஆளுநர் காலதாமதம் செய்யவில்லை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஆளுநர் வித்யா சாகர் ராவ் காலதாமதம் எதுவும் செய்யவில்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஆளுநர் காலதாமதம் செய்யவில்லை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஆளுநர் வித்யா சாகர் ராவ் காலதாமதம் எதுவும் செய்யவில்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னையில் அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:-
ஆளுநர் வித்யாசாகர் ராவை மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தார். அரசியல் சாசனப்படியே ஆளுநர் நடவடிக்கை எடுத்து வருகிறார். பல மாநிலங்களில் சட்டப்பேரவை சில மாதங்களுக்கு முடக்கி வைத்து, பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு நிர்வாகம் முடங்கவில்லை: அரசு நிர்வாகம் முடங்கவில்லை. தினமும் அரசு அதிகாரிகளுடன் பேசி வருகிறேன். தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், காவல் துறை இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோரை வீட்டுக்கே அழைத்து ஆலோனை நடத்தினேன். அதனால், அரசு நிர்வாகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. தலைமைச் செயலகத்துக்கு திங்கள்கிழமை நேரில் சென்று பணிகளை ஆற்றுவேன்
என்னை (பன்னீர்செல்வம்) ஆதரித்த எம்எல்ஏக்கள் சுதந்திரமாக வீதியில் உலா வருகின்றனர். சொந்த ஊருக்குச் சென்று வருகின்றனர்.
ஆனால், சசிகலாவால் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை பாருங்கள். அவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று, மக்களைச் சந்தித்துவிட்டு, மனசாட்சியின்படி முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா ஏற்றுக் கொள்ளும்.
தொந்தரவில் உள்ள அவர்களை மீட்க அங்கே சென்றால், அசாதாரண சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அறவழியில் மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
தீபாவை ஏன் அனுமதிக்கவில்லை? கூவத்தூருக்கு சசிகலா இரு நாள்களாகச் சென்று, பேட்டி அளிக்கிறார். 75 நாள்கள் மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தார். ஒரு நாளாவது மக்களுக்கு பேட்டி அளித்தாரா? இப்போது எப்படிப் பேசுகிறார்? ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் உண்மை நிலை அறியவே விசாரணை கமிஷன் தேவை. ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதுதான் அவரது அண்ணன் மகள் தீபாவை அனுமதிக்கவில்லை. இறந்த பிறகாவது அனுமதியுங்கள் என்று நீண்ட நேரம் கெஞ்சிதான் பிறகு அனுமதிக்கப்பட்டார்.
சொத்துகள் மீட்கப்படும்: ஜெயலலிதாவின் சொத்துகள் அதிமுகவுக்குத்தான் என்று அவரே கூறியுள்ளார். எவ்வளவு சொத்துகள் உள்ளன என்பதை போகப்போகத் தெரிவிக்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com