குமரியிலிருந்து சென்னைக்கு தமிழ் பரப்புரை ஊர்திப் பயணம்

தமிழகத்தில் தமிழுக்கு முதன்மை வேண்டி, கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பன்னாட்டு தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தலைமையில் பரப்புரைப் பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
பரப்புரைப் பயணத் தொடக்க விழாவில் பங்கேற்றோர்.
பரப்புரைப் பயணத் தொடக்க விழாவில் பங்கேற்றோர்.

தமிழகத்தில் தமிழுக்கு முதன்மை வேண்டி, கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பன்னாட்டு தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தலைமையில் பரப்புரைப் பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தமிழ்வழிக் கல்விக்கு முக்கியத்துவம், கோயில்களில் தமிழ் வழிபாடு, பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முதன்மை, திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆகியன சார்பில் 25-ஆவது ஆண்டு ஊர்திப் பயணம் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு, மாவட்ட பன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவர் கோ.முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். ஆன்மிகத் தோட்டம் வின்சென்ட் அடிகளார், பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிர்வாகி வ.இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழறிஞர் சி.பா.அய்யப்பன்பிள்ளை வரவேற்றார்.
குமரி மாவட்ட தமிழ்நல எழுத்தாளர் சங்கக் காப்பாளர் ச.மனக்காவலப்பெருமாள் பயணத்தைத் தொடக்கி வைத்தார். இப்பயணம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி வழியாக வரும் 21-ஆம் தேதி சென்னையைச் சென்றடைகிறது.
தொடக்க விழா நிகழ்வில் அகில இந்திய வானொலி (தூத்துக்குடி) நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆ.சண்முகையா, தமிழறிஞர் வை.கோபாலகிருஷ்ணன், வஉசி பேரவைத் தலைவர் தாமஸ், புலவர் கு.பச்சைமால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாக்குவாதம்: முன்னதாக, பரப்புரைப் பயணத் தொடக்க விழாவுக்கு முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறி போலீஸார் தமிழறிஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com