கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் சுய விருப்பத்தின் பேரில் தான் தங்கியுள்ளனர்: காவல்துறை பதில் மனு

கூவத்தூரில் உள்ள விடுதியில் சொந்த விருப்பத்தின் பேரில்தான் அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் தங்கியுள்ளனர் என்று காவல்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.


சென்னை: கூவத்தூரில் உள்ள விடுதியில் சொந்த விருப்பத்தின் பேரில்தான் அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் தங்கியுள்ளனர் என்று காவல்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

குன்னம் தொகுதி எம்எல்ஏவை மீட்டு தரக்கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை இன்று பதில் அறிக்கை தாக்கல் செய்தது.

அதில், கூவத்தூர் விடுதியில் தங்கியிருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அவர்களது சுய விருப்பத்தின் பேரில்தான் தங்கியுள்ளனர் என்றும், அவர்களை யாரும் கடத்தி வைக்கவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன் மற்றும் கீதாவின் வாக்குமூலம் சீலிட்ட கவரில் நீதிபதியிடம் வழங்கப்பட்டது. அந்த வாக்குமூலத்தில் எம்எல்ஏக்களின் கையெழுத்து உள்ளது. அதில், நாங்கள் இங்கு சுதந்திரமாக உள்ளோம். சுய விருப்பத்தின் பேரில் தங்கியுள்ளோம் என்று எம்எல்ஏக்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆனால், காவல்துறை பதில் மனுவில் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com