திருத்தணி நல்ல தண்ணீர் குளத்தை சுத்தம் செய்த இளைஞர்கள்

நல்ல தண்ணீர் குளத்தை சுத்தம் செய்யும் பணியில், நம்ம திருத்தணி இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 75-க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

நல்ல தண்ணீர் குளத்தை சுத்தம் செய்யும் பணியில், நம்ம திருத்தணி இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 75-க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
திருத்தணி, காந்தி நகரில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தில் தண்ணீர் இருந்தால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உயரும். ஆனால், குளத்தை முறையாகப் பராமரிக்காமல், அப்பகுதிவாசிகள் சிலர், குளத்தில் குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டி வந்தனர். இதனால், குளத்தில் தண்ணீர் மாசுபடுவதுடன், தூர்வாராததால், குளத்துக்கு நீர்வரத்து சரிவர இல்லாமல் போனது.
இந்நிலையில், திருத்தணி நல்ல தண்ணீர் குளத்தை, நம்ம திருத்தணி இளைஞர்கள் சங்கம், தனியார் தொண்டு நிறுவனம், அரசினர் மேல்நிலைப் பள்ளி, அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த என்.சி.சி. மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 200-க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி சுத்தம் செய்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை 3-வது நாளாக, சுத்தம் செய்யும் பணியில் நம்ம திருத்தணி இளைஞர்கள் சங்கம், சென்னை, சோழங்கநல்லுôர் பகுதியில், சி.டி.எஸ். மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஆண், பெண் ஊழியர்கள் 75-க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி அங்கிருந்த குப்பை, ஆகாய தாமரைகளை அகற்றினர். முன்னதாக, நம்ம திருத்தணி இளைஞர்கள் சங்கம் மற்றும் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் காந்தி நகர், முருகப்பா நகர், கலைஞர் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஊர்வலமாகச் சென்று, குளத்தில் குப்பையைப் போட வேண்டாம், குடிநீர் அசுத்தம் ஆகும் என கோஷமிட்டவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com