முதல்வராக பதவியேற்க முடிவு செய்தது ஏன்? மனம் திறந்தார் சசிகலா

தான் முதல்வராக பதவியேற்க முடிவு செய்தது ஏன் என்பது குறித்து அதிமுக பொதுச் செயலர் சசிகலா தனது மனம் திறந்து பேசினார்.
முதல்வராக பதவியேற்க முடிவு செய்தது ஏன்? மனம் திறந்தார் சசிகலா


சென்னை: தான் முதல்வராக பதவியேற்க முடிவு செய்தது ஏன் என்பது குறித்து அதிமுக பொதுச் செயலர் சசிகலா தனது மனம் திறந்து பேசினார்.

போயஸ் தோட்டத்துக்கு வெளியே தொண்டர்களிடம் பேசிய சசிகலா,  பதவி மீது எனக்கு ஆசையில்லை. முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை.  

பல சோதனைகளை வென்று அதிமுக பயணித்து வருகிறது. சோதனைகள் அதிமுகவுக்கும் எனக்கும் புதிதல்ல. எத்தனை எதிரிகள் வந்தாலும் சமாளிக்கும் திறன் நம்மிடம் உள்ளது.

காவல்துறைக்கு சங்கடம் ஏற்படாமல் அமைதிப் போராட்டம் தொடரும். எம்ஜிஆரின் மறைவின் போது ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தோம்.

நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா மறைந்த அன்றே முதல்வராகியிருக்க முடியும். ஜெயலலிதா மறைந்த போது எனக்கு பதவி ஆசை இல்லை. ஆனால், பன்னீர்செல்வம் திமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் முதல்வராக பதவியேற்க முடிவு செய்தேன்.

சீப்பை மறைத்துவிட்டால் கல்யாணம் நின்று விடாது. நிச்சயம் தர்மம் வெல்லும். போராட்டம் என்பது என் கையில் ஒட்டுகிற தூசு மாதிரி. அதிமுகவை எக்காலத்திலும் பிரிக்க முடியாது.

பன்னீர்செல்வத்தால் ஒன்றரை கோடி தொண்டர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com