விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி போட்டி

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் மாட்டுவண்டிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்தனர்.
விளாத்திகுளத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி போட்டி.
விளாத்திகுளத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி போட்டி.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் மாட்டுவண்டிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ரேக்ளா மாட்டுவண்டிகள் சங்கத்தின் சார்பில், 5-ஆவது ஆண்டு விழாவையொட்டி, விளாத்திகுளம் - மதுரை நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெரிய மாட்டுவண்டிகளுக்கு 10 கி.மீ. தொலைவும், சிறிய மாட்டுவண்டிகளுக்கு 7 கி.மீ. தொலைவும் எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்காகவும், காளைகளைப் பாதுகாக்கவும் போராடிய மாணவர், மாணவிகளை கௌரவப்படுத்தும் வகையில், போட்டிகளை மாணவர், மாணவிகள் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர்.
பெரிய மாட்டுவண்டி போட்டியில், விருதுநகர் மாவட்டம், வெல்லூரைச் சேர்ந்த அர்ச்சனா வினோத்குமார் மாட்டுவண்டி முதலிடமும், மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பசும்பொன் மாட்டுவண்டி 2-ஆம் இடமும், தூத்துக்குடி ஓசனூத்தைச் சேர்ந்த தாயம்மாள் மாட்டுவண்டி மூன்றாவது இடத்தையும் பெற்றன.
சிறிய மாட்டுவண்டி போட்டியில், ராமநாதபுரம் சாயல்குடி புல்லட் அந்தோனியார் மாட்டுவண்டி முதலிடம், விருதுநகர் கம்பத்துப்பட்டி வீரசிங்கராஜ் மாட்டுவண்டி இரண்டாமிடம், சிவகங்கை கூட்டராங்கோட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் மாட்டுவண்டி மூன்றாமிடம் பெற்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு விளாத்திகுளம் ரேக்ளா மாட்டு வண்டிகள் சங்கம் சார்பில், மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத் தொகையாக வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்தத் தடை நீக்கப்பட்டதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி போட்டி நடைபெற்றதால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சாலை நெடுகிலும் நின்று ரசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com