கூவத்தூருக்கு 200 பேர் கொண்ட அதிரடிப் படை விரைந்தது!

சொத்துக் குவிப்பு வழக்கில்  சசிகலா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 200 பேர் கொண்ட அதிரடி படை கூவத்தூரை நோக்கி விரைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூவத்தூருக்கு 200 பேர் கொண்ட அதிரடிப் படை விரைந்தது!

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில்  சசிகலா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 200 பேர் கொண்ட அதிரடி படை கூவத்தூரை நோக்கி விரைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் தீர்ப்பின் பிறகு சென்னையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 10 ஆயிரம் போலீசார் பணியில் நிறுத்தபப்ட்டுள்ளனர்.

அதே நேரத்தில் சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள உல்லாச விடுதியை நோக்கி 50-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களில் 200 அதிரடி படையினர் விரைகின்றனர்.

தீர்ப்பின் பிறகு அங்கு கூடத் துவங்கிய பொதுமக்களை விலகிச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com