சசிகலாவை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்: தீபா பேட்டி 

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலாவை பொதுமக்கள் என்றும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டியளித்துள்ளார்.
சசிகலாவை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்: தீபா பேட்டி 

சென்னை: ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலாவை பொதுமக்கள் என்றும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டியளித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது 

நியாயம் வென்றுள்ளது. அம்மா இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று ஒரு நல்ல நாள். ஊழல்  செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்துள்ளது. தண்டனை பெற்றுள்ள சசிகலாவை மக்கள் எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தற்போது புதிய விஷயங்கள் நடந்துள்ளது. அது தொடர்பாக சிந்திக்க வேண்டி இருக்கிறது. எனது திட்டம் குறித்து விரைவில் தகவல் வெளியிடுவேன்.

ஜெயலலிதாவை கடந்த 30 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தினர்ஏமாற்றி வந்துள்ளார்கள். . சசிகலா குடும்பத்தினர் யாரை விரும்புகிறார்களோ அவரை நியமிக்கிறார்கள்.சசிகலா ஆதிக்கம் செலுத்துகிறார். ஆனால் இவர்களை எல்லாம் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டிருந்திருக்க மாட்டார்.

அம்மாவின் வாரிசுகள் உடன் இணைந்து செயல்படுவதை வரவேற்பதாக கூறியுள்ள முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நன்றி. விரைவில் எனது திட்டத்தை வெளியிடுவேன்.

இவ்வாறு தீபா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com