சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருவண்ணாமலை அதிமுக நகர முன்னாள் செயலாளர் கனகராஜ் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அண்ணாமலையார் கோயில் பகுதியில் நடைபெற்றுள்ளது. தமிழக காவல் துறை செயலிழந்து வருவதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது.
வேலூர் மாவட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி ஜி.ஜி.ரவியும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையும் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடைபெற்றுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 1,818 படுகொலைகள் நடைபெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குற்றங்கள் பெருகிவரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
தமிழத்தில் அமைதியை நிலைநாட்டுவதும், மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்வதும் அரசின் முக்கியக் கடமையாகும். ஆனால், மக்கள் சேவைக்குப் பதிலாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்யில்தான் ஆளும் கட்சியினர் தீவிரம் காட்டுகின்றனர்.
காவல் துறையை வலுப்படுத்தும் விஷயத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல், சீரமைப்புக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com