தமிழக உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி மாற்றம்: புதிய ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம்

தமிழக காவல் துறையில் உளவுத் துறை ஐ.ஜி. கே.என்.சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு, அந்தப் பதவிக்கு ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.
தமிழக உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி மாற்றம்: புதிய ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம்

தமிழக காவல் துறையில் உளவுத் துறை ஐ.ஜி. கே.என்.சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு, அந்தப் பதவிக்கு ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.
இதுகுறித்த விவரம்:
தமிழக காவல் துறையில் உளவுப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த கே.என். சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு, அந்தப் பணியிடத்துக்கு காவலர் நலப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் சத்தியமூர்த்தியை வேறு பதவியில் நியமிக்காமல், காத்திருப்போர் பட்டியலில் வைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான உத்தரவை உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வவர்மா திங்கள்கிழமை வெளியிட்டார்.
இந்தப் பதவியில் கே.என்.சத்தியமூர்த்தி கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். பின்னர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது சத்தியமூர்த்தி தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதற்கிடையே சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதும், சத்தியமூர்த்தி மீண்டும் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர், கடந்த 6 -ஆம் தேதி திடீரென விடுமுறையில் சென்றார். அதன் பின்பும் தொடர்ந்து விடுமுறையிலேயே இருந்து வந்தார்.
உளவுத் துறை ஐ.ஜி. பணியை, பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இதனிடையே தமிழக அரசியலில் அசாதாரண நிலை ஏற்பட்டிருக்கும் வேளையில், திடீரென சத்தியமூர்த்தி அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, டேவிட்சன் தேவாசீர்வாதம் உளவுப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டது காவல் துறை அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்கெனவே உளவுத் துறை டி.ஐ.ஜி.யாகவும், ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com