பன்னீர்செல்வத்துக்கு மோகன், பொன்ராஜ் ஆதரவு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரும் அப்துல் கலாம் லட்சிய கட்சியின் தலைவருமான வி.பொன்ராஜ், முன்னாள் அமைச்சர் மோகன்
பன்னீர்செல்வத்துக்கு மோகன், பொன்ராஜ் ஆதரவு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரும் அப்துல் கலாம் லட்சிய கட்சியின் தலைவருமான வி.பொன்ராஜ், முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வரின் இல்லத்துக்கு திங்கள்கிழமை வந்து ஆதரவு தெரிவித்த பின்னர், வி.பொன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அசாதரண சூழல் நிலவி வருகிறது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு தமிழகம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தீர்மானிக்க வேண்டியக் கட்டத்தில் இருக்கிறோம். சிறிய தொண்டன்கூட முதல்வராக முடியும் என நிரூபித்துக்காட்டிய இயக்கம் அதிமுக.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 3 முறை முதல்வராக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் எளிமையானவர். வர்தா புயல், ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு குடிநீர், ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் என தொடர் நடவடிக்கைகளை எடுத்த பன்னீர்செல்வத்தை நிர்பந்தப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்துள்ளனர். எளிய தலைவர்களால் மட்டுமே ஜனநாயக ஆட்சியைத் தரமுடியும்.
விவசாயப் பிரச்னை, நீர் வழிச்சாலை, தென்னக நீர்வழிச்சாலை உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக முதல்வரிடம் பேசியுள்ளேன். அதனை நிறைவேற்றித் தருவதாகக் கூறியுள்ளார்.
கூவத்தூர் விடுதியில் உள்ள எம்எல்ஏக்கள் தொகுதி மக்களின் கருத்தைக் கேட்டு மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் வாடிவாசலை திறந்த மக்கள் கூவத்தூர் விடுதிவாசலை திறக்கும் நாள் வரக்கூடும் என்றார்.
இதேபோல், முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் ஆகியோரும் ஆதரவைத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com