மாநில மொழி செய்திப் பிரிவுகளை இடம் மாற்றக் கூடாது

மாநில மொழி செய்திப் பிரிவுகளை இடம் மாற்றக் கூடாது

மாநில மொழி செய்திப் பிரிவுகளை அந்தந்த மாநிலத் தலைநகரங்களுக்கு மாற்றுவது தொடர்பான உத்தரவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மாநில மொழி செய்திப் பிரிவுகளை அந்தந்த மாநிலத் தலைநகரங்களுக்கு மாற்றுவது தொடர்பான உத்தரவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுக்கு மார்க்சிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எழுதியுள்ள கடித விவரம்:
அகில இந்திய வானொலியில் தமிழ், மலையாளம், அஸ்ஸாமிஸ் மற்றும் ஒரியா மாநிலப் பிரிவுகளை வரும் மார்ச் 1 -ஆம் தேதி முதல், அந்தந்த மாநிலத் தலைநகருக்கே மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது செய்திகளை சிறப்பான முறையில் பகுத்தாய்ந்து வெளியிடுவதற்கு உதவாது.
தில்லியிலிருந்து பல ஆண்டு காலமாக மாநில மொழிகளில் ஒலிபரப்பப்பட்டுவரும் இந்த செய்திக்குறிப்புகள், சாமானிய மக்களுக்கு தேசிய, சர்வதேச மற்றும் மாநில செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கான பிரதான அம்சமாக இன்றளவும் விளங்கி வருகிறது.
ஏற்கெனவே இதற்கான முயற்சி எடுக்கப்பட்டபோது, பல்வேறு தரப்பினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முயற்சி கைவிடப்பட்டது. அப்போது மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், மாநில செய்திப் பிரிவுகள் நாட்டின் தலைநகரிலேயே தொடர்ந்து செயல்படும் என்று உறுதி அளித்திருந்தார்.
இந்த உறுதிமொழி இப்போது மீறப்பட்டிருக்கிறது.எனவே, மாநில மொழிச் செய்திப் பிரிவுகளை தில்லியிலிருந்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைநகர்களுக்கு மாற்றுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com