மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பிளாட்டினம் மதிப்பீடு சான்றிதழ்

இந்திய தொழில் கூட்டமைப்பின் இந்திய பசுமை குடில் சபையின் (ஐ.ஜி.பி.சி.) பிளாட்டினம் மதிப்பீடு சான்றிதழ் தரத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ரயில் நிலையங்கள் உயர்ந்துள்ளன.

இந்திய தொழில் கூட்டமைப்பின் இந்திய பசுமை குடில் சபையின் (ஐ.ஜி.பி.சி.) பிளாட்டினம் மதிப்பீடு சான்றிதழ் தரத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ரயில் நிலையங்கள் உயர்ந்துள்ளன.
காரிடர் ஒன்றில் சின்னமலை, கிண்டு, நங்கநல்லூர், மீனம்பாக்கம், விமான நிலையம் ஆகிய 5 நிலையங்களும், காரிடர் 2-இல் உள்ள கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர், தாமஸ்மவுண்ட் ஆகிய 8 நிலையங்களும் பிளாட்டினம் மதிப்பீடு தரத்துக்கு உயர்ந்துள்ளன.
இந்த 13 நிலையங்கள் மதிப்பீட்டுக்காக இந்திய பசுமை கட்டடம் கவுன்சிலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. மொத்தம் 72 புள்ளிகள் எடுத்து, தரப் பிரிவில் உயர்ந்துள்ளன.
பிளாட்டினம் மதிப்பீடு அளவு சான்றிதழ், சர்வதேச தலைமைக்கான அங்கீகாரம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com