ஆட்சி அமைக்க அழைக்கப்படுவாரா எடப்பாடி பழனிச்சாமி..?

தமிழகத்தில் யார் முதல்வராக பொறுப்பேற்க வேண்டுமென முடிவு செய்வதில் தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ் முன் 3 வாய்ப்புகள் உள்ள நிலையில்,
ஆளுநரிடம் ஆதரவாளர்கள் கடிதத்தை வழங்குகிறார் அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி கே.பழனிசாமி.
ஆளுநரிடம் ஆதரவாளர்கள் கடிதத்தை வழங்குகிறார் அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி கே.பழனிசாமி.

தமிழகத்தில் யார் முதல்வராக பொறுப்பேற்க வேண்டுமென முடிவு செய்வதில் தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ் முன் 3 வாய்ப்புகள் உள்ள நிலையில், தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா மீது சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்களை கடத்தியதாக வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது. இதையடுத்து ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்புவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.

இதைத் தொடர்ந்து, பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் உள்ள 48-ஆவது அறையில் செவ்வாய்க்கிழமை நீதிபதி அஸ்வத் நாராயணா முன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சரணடைய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சரணடைய சசிகலா புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக அரசியலில் சசிகலா நடராஜன் மற்றும் பன்னீர்செல்வத்திற்கு இடையிலான அதிகாரப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு தற்போது தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் உள்ளது. இதன்படி தமிழக பொறுப்பு ஆளுநர் முன்பு மூன்று வழிகள் உள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசியல் சூழலில் நிலவும் பரபரப்பை முடிவுக்கு கொண்டு வர, தமிழக ஆளுநருக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?

- முதல்வர் பன்னீர்செல்வத்தின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டு, அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்து, பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரலாம். அவர் நிரூபிக்கும் பட்சத்தில் முதல்வராக தொடர அனுமதிக்கலாம். தவறினால் ஆட்சியை கலைக்கலாம்.

- இருவருக்கும் ஒரே நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் வாக்கெடுப்பு நடத்துவது. இதற்காக சட்டப்பேரவையை கூட்டும் ஆளுநர், பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரில் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை அறிய உறுப்பினர்களின் வாக்கெடுப்பு நடத்தி முதல்வரை தேர்வு செய்யலாம். இருவரில் யாருக்கும் 117 உறுப்பினர்களின் ஆதரவு ‌கிடைக்காமல்போனால், ஆட்சியை கலைக்க ஆளுநர் உத்தரவிடலாம். அடுத்த பேரவைத் தேர்தல் நடைபெறும் வரை குடியரசுத் தலைவர் ஆட்சியை ஆளுநர் அமல்படுத்தலாம்.

- தற்போது ஆளும் அதிமுகவில் நிலவி வரும் குழப்பம் மற்றும் பெரும்பான்மையை நிரூபிப்பதில் இழுபறியை அடுத்து சுமூகமான சூழல் நிலவும் வரை தற்போதைய பேரவையை சில காலங்களுக்கு முடக்கி வைத்து, ஆளுநர் ஆட்சியை அமலுக்கு கொண்டுவருவதற்கும் வாய்ப்பு உள்ளது.

சசிகலா ஆதரவாளரான எடப்பாடி கே.பழனிச்சாமி, தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி, அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

இந்நிலையில், மதுரை தெற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுக எம்எல்ஏக்களை கடத்தியதாக, அக்கட்சியின் பொதுச் செயலர் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பாரா என்பதில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக அடுத்த யார் தேர்வு செய்யப்படுவார் என அரசியல் நோக்கர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com