ஓ.பன்னீர்செல்வத்துக்கு செம்மலை ஆதரவு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மேட்டூர் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை, மேட்டுபாளையம் எம்எல்ஏ சின்னராஜ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் ஓ.கே.சின்னராஜ், எஸ்.செம்மலை. உடன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ப.மோகன், அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்த பிறகு, செம்மலை அளித்த பேட்டி:
முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் நல்ல முடிவை எடுத்துள்ளேன் என்பதை உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பே உறுதி செய்துள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சியானது பன்னீர்செல்வம் உருவில் தொடரும்.
இதற்கு ஜெயலலிதாவின் ஆன்மா நிச்சயமாக வழிவகுக்கும்.
எம்எல்ஏக்கள் அனைவரும் வருவார்கள். அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சி தொடரும்.
தமிழகத்தை வழி நடத்தவும் கட்சியைக் காப்பாற்றவும் பன்னீர்செல்வத்தைத்தான் ஜெயலலிதா தந்துவிட்டுச் சென்றுள்ளார். அவரால்தான் தமிழகத்தையும், கட்சியையும் காப்பாற்ற முடியும்.
எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு: அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிச்சாமி தகுதியற்றவர். 123 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறிக் கொள்கின்றனர். இதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை என்றார்.
இதையடுத்து, எம்எல்ஏ சின்னராஜ் கூறுகையில், "அதிமுக இன்னும் 100 ஆண்டு காலம் இருக்கும். இதை நிறைவேற்றும் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இருப்பார்' என்றார்.
10 எம்எல்ஏக்கள் ஆதரவு: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், எம்எல்ஏக்கள் எஸ்.பி.சண்முகநாதன், மாணிக்கம், மனோரஞ்சிதம், மனோகரன், ஆறுக்குட்டி, சரவணன், செம்மலை, சின்னராஜ் ஆகியோருடன் பன்னீர்செல்வத்தையும் சேர்த்து 10 எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com