ஓ.பி.எஸ். அணியினர் ஆளுநருடன் சந்திப்பு

ஆளுநர் வித்யாசாகர் ராவை, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்துப் பேசினர்.

ஆளுநர் வித்யாசாகர் ராவை, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்துப் பேசினர்.
ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன், முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநரைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது, தங்களது அணிக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆட்சி அமைக்கத் தங்களையே அழைக்க வேண்டும் எனவும் அவர்கள் ஆளுநரிடம் வலியுறுத்தியதாகக்கூறப்படுகிறது.
எடப்பாடிக்குப் பிறகு...: கூவத்தூரில் அதிமுக பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்று அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவை குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு ஆளுநரைசெவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சந்தித்து விட்டுச் சென்றார். ஆட்சி அமைக்க உரிமை கோரி அதிமுக பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி அளித்தார்.
அதன் பிறகு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வா.மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநரை இரவு 7 மணிக்கு சந்தித்து விட்டுச் சென்றனர். எனினும் ஆளுநரைச் சந்தித்து விவாதித்தவிவரங்களை ஓபிஎஸ் அணியினர் செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தவில்லை.
மீண்டும் பரபரப்பு: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை (பிப்.14) இரவு 9.15 மணி அளவில் திடீரென ஜெயலலிதா சமாதிக்குச் சென்றவுடன் பரபரப்பு அதிகரித்து. அங்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வந்து அவரைச் சந்தித்து அரசியலில் நுழைவதாக அறிவித்தார்.
ஒரு வாரத்துக்கும் மேலாக...: ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பது குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதனால், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்த குழப்பம் இன்னும் முற்றுப்பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com