காரைக்கால் கடல் பகுதியில் சூறைக்காற்று: 3 படகுகள் கவிழ்ந்து விபத்து

கடலில் மீன்பிடித்துவிட்டு திரும்பும்போது சூறைக்காற்றினால் காரைக்கால் பகுதியில் 3 பைபர் படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாயின. படகுகளில் வந்த மீனவர்கள் நீந்தி கரையை
காரைக்கால் கடல் பகுதியில் சூறைக்காற்று: 3 படகுகள் கவிழ்ந்து விபத்து

கடலில் மீன்பிடித்துவிட்டு திரும்பும்போது சூறைக்காற்றினால் காரைக்கால் பகுதியில் 3 பைபர் படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாயின. படகுகளில் வந்த மீனவர்கள் நீந்தி கரையை வந்தடைந்தனர்.
நாகை மாவட்டம், வானகிரியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் காரைக்காலில் தங்கி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவருகிறார். இவரது பைபர் படகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரும், பாலமுருகன், செல்லதுரை, சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை காரைக்கால் துறைமுகம் நோக்கி திரும்பிக்
கொண்டிருந்தனர்.
இதுபோன்று தரங்கம்பாடியைச் சேர்ந்த அருள்செல்வம் தனது பைபர் படகில் தினேஷ், சுரேஷ் உள்ளிட்ட 10 பேருடன் மீன்பிடித்துவிட்டு காரைக்கால் துறைமுகம் திரும்பிக்கொண்டிருந்தனர். கடல் பகுதியில் சூறைக் காற்றும் பெரிய அலைகளும் தொடர்ந்த நிலையில், முகத்துவாரத்தில் படகுகளைச் செலுத்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக 2 படகுகளும் கவிழ்ந்தன. இவற்றில் பயணம் செய்த மீனவர்கள் கடலில் குதித்து நீந்தி கரையை அடைந்தனர். இவர்களது படகில் இருந்த மீன்கள், மோட்டார் மற்றும் மீனவர்களது செல்போன்கள் உள்ளிட்டவை கடலில் மூழ்கின.
தகவல் அறிந்து தரங்கம்பாடி, வானகரி மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று படகை முகத்துவார கரைப் பகுதிக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து மீனவர் வெங்கடேஷ் கூறும்போது, தமது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் ரூ.3 லட்சம் வரை சேதமடைந்துவிட்டதாகத் தெரிவித்தார். அருள்செல்வம் கூறும்போது, படகு புதியது என்றும், ரூ.5 லட்சம் வரை இதனால் இழப்பு ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
சாதகப்பறவை என எழுதப்பட்டிருந்த மற்றொரு படகும் அப்பகுதியில் கவிழ்ந்து கிடந்தது. அதையடுத்து அப்படகை சேர்ந்தவர்கள் குறித்து விசாரணை
நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com