கூவாத்தூர் நட்சத்திர விடுதி பகுதியில் மின் துண்டிப்பு

மதுராந்தகத்தை அடுத்த கூவாத்தூரில் தனியாருக்குச் சொந்தமான நட்சத்திர விடுதி சாலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அச்சாலை செவ்வாய்க்கிழமை மாலை இருளில் மூழ்கியது.
கூவாத்தூர் நட்சத்திர விடுதி பகுதியில் மின் துண்டிப்பு

மதுராந்தகத்தை அடுத்த கூவாத்தூரில் தனியாருக்குச் சொந்தமான நட்சத்திர விடுதி சாலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அச்சாலை செவ்வாய்க்கிழமை மாலை இருளில் மூழ்கியது.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த சில நாள்களாக தங்கினர். இந்நிலையில், சசிகலாவுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை காலை உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்ததையடுத்து, வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரை கண்ணன், தெற்கு மண்டல ஐ.ஜி. வரதராஜன், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. முத்தரசி மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் நட்சத்திர விடுதி பகுதியில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின் காலை 10.45 மணிக்கு காவல் துறையினர் விடுதிக்குள் சென்று எம்.எல்.ஏ-க்கள் தங்கியுள்ள அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.
கூவத்தூர் பேட்டை, நாவக்கால் காலனி ஆகிய பகுதிகளைச் சுற்றி 144 தடை உத்தரவு போடப்பட்டதால், வெளியூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், மற்ற நபர்களை நட்சத்திர விடுதி பக்கமாகச் செல்லவிடாமல் காவல் துறையினர் வெளியேற்றி வந்தனர். இந்நிலையில் எம்.எல்.ஏ.க்களை அங்கிருந்து வெளியேற்ற ஏதுவாக செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சாலையோரம் உள்ள தெரு மின் விளக்குகள் எரியாததால் கூவத்தூர் பேட்டை பகுதி இருளில் மூழ்கியது. இருப்பினும் அந்த விடுதியில் ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு மூலம் மின்விளக்குகள் எரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூவத்தூர் பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள தெரு மின்விளக்குகள் எரியாததால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com