ஜல்லிக்கட்டு கலவர வழக்கு: பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் 2 வார அவகாசம்! 

ஜல்லிக்கட்டு தொடர்பாக மெரீனாவில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை மற்றும் இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு 2 வார அவகாசம் அளித்து ...
ஜல்லிக்கட்டு கலவர வழக்கு: பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் 2 வார அவகாசம்! 

சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பாக மெரீனாவில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை மற்றும் இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு 2 வார அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி சென்னை மெரினா கடற்கரையில் கடந்த மாதம் 18-ஆம் தொடங்கி ஆறுநாட்கள் தொடர் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் இறுதி நாளான ஜனவரி 23-ஆம் தேதியன்று  நிகழந்த கலவரத்தில் பலர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டனர். மேலும் பொது சொத்துக்களும் சேதபடுத்தப்பட்டன.

இந்த கலவரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 9 வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் 2 வார அவகாசம் அளித்து வழக்கை ஒத்தி வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com