தொகுதியை அடைமொழியாக கொண்டவர்

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப் பேரவைத் தொகுதியை தனது பெயரில் அடைமொழியாகக் கொண்டவர்.
தொகுதியை அடைமொழியாக கொண்டவர்

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப் பேரவைத் தொகுதியை தனது பெயரில் அடைமொழியாகக் கொண்டவர்.
சேலம் மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த அவர், கடந்த 1954-ஆம் ஆண்டு மார்ச் 2-இல் பிறந்தவர். பி.எஸ்.சி., பட்டம் பெற்ற அவர், விவசாயத்தை தொழிலாகக் கொண்டவர்.
கடந்த 1989-1991, 1991 முதல் 1996 ஆகிய காலங்களில் சட்டப் பேரவை உறுப்பினராக பதவி வகித்தவர். 1998 முதல் 1999 வரையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
இதன் பின், 2011-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற அவர், நெடுஞ்சாலைகள்-சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சராக இருந்தார்.
இதைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்று, நெடுஞ்சாலைகள்-சிறுதுறைமுகங்கள், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அந்தத் தொகுதியின் பெயரே அவரது பெயருக்கு முன்பாக அடைமொழியாக ஒட்டிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது, சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் பூலாம்பட்டியில் உள்ள நெடுங்குளம் கிராமத்தில் வசித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com