புதுவை, காரைக்கால் வறட்சியை ஆய்வு செய்ய மத்திய குழு வருகை: நாராயணசாமி

புதுச்சேரி, காரைக்காலில் வறட்சி பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு விரைவில் வரவுள்ளது என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவை, காரைக்கால் வறட்சியை ஆய்வு செய்ய மத்திய குழு வருகை: நாராயணசாமி

புதுச்சேரி, காரைக்காலில் வறட்சி பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு விரைவில் வரவுள்ளது என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அவர் புதன்கிழமை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இஸ்ரோ விஞ்ஞானிகள் பிஎஸ்எல்வி-சி 37 என்ற ஓரே ராக்கெட் மூலம் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளனர். இது உலக சாதனையாகும். ரஷ்யா ஏற்கெனவே 37 செயற்கைக் கோள்களை மட்டுமே செலுத்தியது.

கடந்த 2013-ம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்துக்கு மங்கள்யான் செயற்கை கோள் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. தற்போது இஸ்ரோ மீண்டும் சாதனை புரிந்துள்ளது.

கிரையோஜினிக் என்ஜின் தொழில்நுட்பத்தை தர ரஷ்யா வந்து தர மறுத்து விட்டது. பின்னர் இஸ்ரோ விஞ்ஞானிகளை அதை வடிவமைத்து வெற்றி கண்டுள்ளனர். விண்வெளித் துறையில் அமெரிக்கா முன்னணியில் இருந்தது. தற்போது நமது நாடும் முன்னணிக்கு வந்துள்ளது. புதுச்சேரி மக்கள், அரசு, எனது சார்பிலும் இஸ்ரோ, அதன் இயக்குநர் கிரண்குமாருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வறட்சியை பார்வையிட மத்திய குழு
புதுச்சேரி மாநிலத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கக் கோரிக்கை வைத்திருந்தோம். தற்போது மத்திய அரசு பதில் அனுப்பி உள்ளது.  வறட்சி குறித்து செய்ய குழு அனுப்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் இடைக்கால நிவாரணம் தருவதற்காக கணக்கெடுப்பு தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 17-ம் தேதி தில்லி செல்ல உள்ளேன். அப்போது வறட்சி பாதிப்புக்காக ரூ.100 கோடி நிதியுதவியை விரைந்து தருமாறு கோருவேன். 

5000 டன் அரிசி தேவை
அனைத்துப் பகுதிகளிலும் ரேஷன் கடைகளில் அரிசியை வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக ரூ.220 கோடி ஆண்டுக்கு செலவாகிறது. காரைக்கால், மாஹே, புதுச்சேரி, ஏனாம் என 5 பிரிவுகளாக பிரித்து 5 ஆயிரம் டன் அரிசியை தலா 1000 டன்னாக பிரித்து எளிதில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் காலதாமதம் தவிர்ககப்படும்.

நீட் தேர்வு
நீட் தகுதித் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி தர வேண்டும். இத்தீர்மானத்தை நேரடியாகவே அனுப்பி உள்ளோம். ஜல்லிக்கட்டு தொடர்பாகவும் தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி தந்தவுடன் அதை சட்டமாக நிறைவேற்றுவோம். துணைநிலை ஆளுநரிடம் இதற்கு அனுமதி பெறத்தேவையில்லை.

விமானப் போக்குவரத்து
புதுச்சேரியில் நிறுத்தப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து சேவை விரைவில் தொடங்கப்படும். இதில் 5 விமான நிறுவனங்கள் ஆர்வம் காண்பித்துள்ளன. முதலில் ஏர் இந்தியா மூலமாக திருச்சி, பெங்களூரு, உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவை தொடங்கப்படும். 

புதுச்சேரி விமான நிலையத்தில் விமான ஓடுபாதை விரிவாக்கத்துக்காக தமிழகத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

விசாரணைக் குழுக்கள் அமைப்பு
ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தால் புதுவைக்கு பாதிப்பு ஏற்படுமா என் முன்கூட்டியே கூற இயலாது. ஏஎப்டி, பிஆர்டிசி, முறைகேடுகள் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பாப்ஸ்கோ, மருந்து கொள்முதல் தொடர்பாக விசாரணை விரைவில் தொடங்கும் என்றார் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com