மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு எம்.எல்.ஏ.க்கள் முடிவெடுக்க வேண்டும்

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் முடிவெடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு எம்.எல்.ஏ.க்கள் முடிவெடுக்க வேண்டும்

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் முடிவெடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஊழல் குற்றசாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நீதிமன்றத்தால் தண்டனை பெற்றுள்ளது ஊழல்வாதிகள் தப்பிக்க முடியாது என்பதைக் காட்டுகிறது. ஊழல் ஒழிக்கப்பட்டு தூய்மையான அரசியலை நோக்கி தமிழகம் செல்ல வேண்டும் என்பதே பாஜக-வின் விருப்பம்.
அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் கட்டாயத்தின் பேரில் முடிவெடுக்காமல், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நிலையான ஆட்சி அமையும் வகையில் முடிவெடுக்க வேண்டும். மேலும் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் கால அவகாசம் எடுத்துக் கொண்டது சரியான நடவடிக்கைதான் என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே தெளிவுப்படுத்தியுள்ளது.
ஊழல் ஒரு பிரச்னையே இல்லை என்பது போலவும், பாஜக புறவாசல் வழியாகத் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com