முதல்வர் பன்னீர்செல்வத்தின் பின்னணியில் பாஜக இல்லை

முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் பின்னணியில் பாஜக இல்லை என பாஜகவின் தேசியச் செயலர் எச். ராஜா தெரிவித்தார்.
முதல்வர் பன்னீர்செல்வத்தின் பின்னணியில் பாஜக இல்லை

முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் பின்னணியில் பாஜக இல்லை என பாஜகவின் தேசியச் செயலர் எச். ராஜா தெரிவித்தார்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதன் வழியே, ஊடகங்கள், சசிகலா தரப்பில் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நியாயமானதல்ல என்பது புரிந்திருக்கும்.
தமிழகத்தில் கடந்த 10 நாள்களாக உருவாக்கப்பட்ட அரசியல் குழப்பம் முடிவுக்கு வருவதற்கான நேரம் நெருங்கியுள்ளது. அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதில் அனுபவமும், போதிய சட்டஅறிவும் பெற்றுள்ள தமிழக ஆளுநர் சரியான முடிவெடுப்பார்.
சட்டப்பேரவையைக் கூட்டி யாருக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் பலம் உள்ளதோ அவரை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே வெளிப்படையான வழியாக இருக்கும்.
முன்னதாக தமிழக முதல்வர் காவல்துறை உதவியுடன் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களை விடுவிக்க வேண்டும்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்சி அமைக்க திமுகவின் உதவியை நாடினால் அதிமுக வாக்காளர்களின் செல்வாக்கை அவர்கள் இழக்க நேரிடும். எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்து முதல்வராக வேண்டும்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செயல்பாட்டின் பின்னணியில் பாஜக இல்லை. மாறாக, மாநில அரசின் வளர்ச்சியின் பின்புலத்தில் பாஜக உறுதுணையாக இருக்கும் என்றார் ராஜா. இந்த சந்திப்பின்போது, திருச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com