ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

விவசாயியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நில அளவையரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

விவசாயியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நில அளவையரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள கோ.பவழங்கொடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் நாகராஜ் (28). விவசாயி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 50 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அளவீடு செய்து தருமாறு ஊ.மங்கலத்தைச் சேர்ந்த நில அளவையர் க.மணிகண்டனிடம் (35) நாகராஜ் கேட்டார்.
இதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டுமென மணிகண்டன் கூறினாராம். இதுகுறித்து கடலூர் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் நாகராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், சேர்ந்தநாட்டிலுள்ள மணிகண்டனின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்ற நாகராஜ் அவரிடம் ரூ.2 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் சதீஷ், சண்முகம், திருவேங்கடம் ஆகியோர் மணிகண்டனைக் கைது செய்து, அவரிடமிருந்த லஞ்சப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது வீட்டிலும் போலீஸார் சோதனை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com