ஆளுநரிடம் அமைச்சரவை பட்டியலை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மதியம் மீண்டும் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தன்னுடன் பதவியேற்கும் அமைச்சரவை பட்டியலை அளித்துள்ளார்.
file photo
file photo


சென்னை: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மதியம் மீண்டும் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தன்னுடன் பதவியேற்கும் அமைச்சரவை பட்டியலை அளித்துள்ளார்.

தமிழக முதல்வராக மிக விரைவில் பதவியேற்குமாறு பழனிசாமிக்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று காலை அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, இன்று மதியம் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற பழனிசாமி, ஆளுநரை சந்தித்து தன்னுடன் பதவியேற்கும் புதிய அமைச்சரவை பட்டியலை வழங்கியுள்ளார்.

பழைய அமைச்சரவையே தொடர உள்ளதாகவும், பெரும்பாலான அமைச்சர்களின் பட்டியலில் மாற்றம் இருக்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வராக எடப்பாடி பழனிசாமியுடன் புதிய அமைச்சரவை இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com