உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாய்ப்பு

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாய்ப்பு

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை, சின்னியம்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது நிலையான ஆட்சி இல்லாத சூழல் உருவாகியுள்ளது. முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இரண்டு பிரிவினர் போட்டி போட்டுக் கொண்டுள்ளதால், அதிமுக இரண்டாக உடைந்துள்ளது.
தற்போது உள்ள சூழலில் ஆட்சி அமைக்க, ஓ.பன்னீர்செல்வம் அல்லது எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் அழைப்பாரா அல்லது பெரும்பான்மை இல்லை எனக் கூறி பிரதான எதிர்க்கட்சியாக உள்ள திமுகவை அழைப்பாரா என்ற பேச்சு எழும் அளவுக்கு சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனாலும், மக்களைச் சந்தித்து, அவர்களின் ஆதரவுடன் மட்டுமே திமுக ஆட்சி அமைக்கும்.
தமிழகத்தில் உள்ள அரசியல் சூழலைப் பார்த்தால், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, திமுகவினர் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் திமுக தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் நாச்சிமுத்து, புறநகர் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் முத்துசாமி, புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் தமிழ்மணி, சிங்காநல்லூர் எம்எல்ஏ நா.கார்த்திக், முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, மு.கண்ணப்பன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பையா கவுண்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com