ஓ. பன்னீர்செல்வத்துக்கு நடிகை கவுதமி ஆதரவு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடிகை கவுதமி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
ஓ. பன்னீர்செல்வத்துக்கு நடிகை கவுதமி ஆதரவு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடிகை கவுதமி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு புதன்கிழமை காலை வந்த நடிகை கவுதமி முதல்வர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
சுமார் ஒரு மணி நேரம் முதல்வர் இல்லத்தில் முதல்வருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நடிகை கவுதமி, செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை.
முன்னதாக நடிகர் மன்சூர் அலிகான் முதல்வரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும். அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தின் முன் பகுதியில் நீச்சல் குளம், ஸ்குவாஷ், செஸ், கேரம் உள்ளிட்ட விளையாட்டு அரங்குகள் அமைத்து பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளுக்கு பெண் விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்கவேண்டுமென முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்தேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com