வாணியம்பாடியில் நின்று சென்ற டபுள்டெக்கர் அதிவேக விரைவு ரயில்: பயணிகள் மகிழ்ச்சி

சென்னை-பெங்களூரு செல்லும் டபுள்டெக்கர் அதிவேக விரைவு ரயில் புதன்கிழமை வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நின்று சென்றதை பயணிகள் வரவேற்று மகிழ்ந்தனர்.
வாணியம்பாடி ரயில் நிலையத்துக்கு வந்த டபுள்டெக்கர் அதிவேக விரைவு ரயிலுக்கு வரவேற்பு அளித்த பயணிகள்.
வாணியம்பாடி ரயில் நிலையத்துக்கு வந்த டபுள்டெக்கர் அதிவேக விரைவு ரயிலுக்கு வரவேற்பு அளித்த பயணிகள்.

சென்னை-பெங்களூரு செல்லும் டபுள்டெக்கர் அதிவேக விரைவு ரயில் புதன்கிழமை வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நின்று சென்றதை பயணிகள் வரவேற்று மகிழ்ந்தனர்.
வேலூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றானதும், தோல் பதனிடும் மற்றும் உற்பத்தி செய்யும் நகரமாக வாணியம்பாடி திகழ்கிறது. ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால், வியாபார நிமித்தமாக தினமும் நூற்றுக்கணக்கான தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், பொதுமக்கள், பயணிகள் வாணியம்பாடிக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், வாணியம்பாடி ரயில் நிலையத்தில் குறைந்த அளவிலே அதிவிரைவு மற்றும் விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன. எனவே, சென்னை-பெங்களூரு மார்க்கமாக செல்லும் டபுள்டெக்கர் அதிவிரைவு ரயில் (எண் 22625-22626) உள்பட விரைவு ரயில்கள் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென பொதுமக்களும், ரயில் பயணிகளும் தென்னக ரயில்வே துறைக்கு கோரிக்கைவிடுத்து வந்தனர்.
இந்த நிலையில், இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று சென்னை-பெங்களூரு மார்க்கமாக காலை 10.04 மணிக்கும், பெங்களூரு-சென்னை மார்க்கமாக மாலை 4.59 மணிக்கும் டபுள்டெக்கர் அதிவிரைவு ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 14-ஆம் தேதி வரை சோதனை முறையில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, புதன்கிழமை காலை ரயில் நிலையத்துக்கு வந்த டபுள்டெக்கர் அதிவிரைவு ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கத் தலைவர் முபீன்பாய் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் தன்வீர் அகமத், முன்னாள் எம்எல்ஏ கோ.வி.சம்பத்குமார், பாஜக பிரமுகர் சிவபிரகாசம், வாணியம்பாடி ரயில்வே ஆய்வாளர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com