பன்னீர்செல்வம் அணி புகார் எதிரொலி: சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் 

அதிமுக சட்ட விதிகளுக்கு புறம்பாக சசிகலா பொதுச் செயலாளாளராக நியமிக்கப்பட்டதாக பன்னீர்செல்வம் அணி தேர்தல் ஆணையத்தில் அளித்த புகாரின் எதிரொலியாக சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம்... 
பன்னீர்செல்வம் அணி புகார் எதிரொலி: சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் 

புதுதில்லி: அதிமுக சட்ட விதிகளுக்கு புறம்பாக சசிகலா பொதுச் செயலாளாளராக நியமிக்கப்பட்டதாக பன்னீர்செல்வம் அணி தேர்தல் ஆணையத்தில் அளித்த புகாரின் எதிரொலியாக சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் ஆதிக்கத்தை எதிர்த்து எதிர்க்குரல் எழுப்பிய பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் உள்ளிட்ட 10 எம்.பிக்கள் நேற்று தில்லி புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் மைத்ரேயன் தலைமையில் நேற்று மதியம் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் சைதியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.   அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அதிமுகவின் கட்சி விதிகளுக்கு எதிராக சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால பொதுச் செயலாளர் என்ற விதியே அதிமுகவில் இல்லை. எனவே தற்போது பொதுச் செயலாளராக உள்ள சசிகலா செய்த நியமனங்கள் மற்றும் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் செல்லாது என்று அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அளித்த மனுவில் தெரிவிக்கபட்டிருந்தது.

அந்த மனுவின் எதிரொலியாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. பன்னீர்செல்வம் அணியினர் அளித்துள்ள புகார் மனுவின் மீதான விளக்கத்தை வரும் 28-ஆம் தேதிக்குள் அளிக்குமாறு அதில் கேட்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸுக்கு சசிகலா தரப்பு அளிக்கும் விளக்கத்தை பொறுத்தே இனி வரும் அதிமுக விவகாரங்கள் இருக்கும் என்று தெரிகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com