2 எம்எல்ஏக்களை மீட்கக் கோரிய ஆள்கொணர்வு மனு தள்ளுபடி

இரு எம்எல்ஏக்களை மீட்டுத் தரக் கோரி தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரு எம்எல்ஏக்களை மீட்டுத் தரக் கோரி தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குன்னம் எம்எல்ஏ ஆர்.டி.ராமசந்திரன், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம்.கீதா ஆகியோரை மீட்டு நேரில் ஆஜர்படுத்தக் கோரி, எம்.ஆர்.இளவரசன், வி.ப்ரீத்தா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "தங்களது சொந்த விருப்பத்தின்பேரிலேயே கூவத்தூர், பூந்தண்டலம் ஆகிய இரு விடுதிகளில் எம்எல்ஏக்கள் தங்கியிருக்கின்றனர்' என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர், நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், டி.மதிவாணன் ஆகியோர் தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்து இருந்தனர்.
இந்த வழக்கில் வியாழக்கிழமை பிறப்பித்த தீர்ப்பில், இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்று குறிப்பிட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
"வழக்குரைஞர்கள் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக, மனுதாரரை மனுத் தாக்கல் செய்வதற்கு நிர்பந்திக்கக் கூடாது. அவ்வாறு செயல்பட்டால் உன்னத தொழிலில் நல்லொழுக்கம், கண்ணியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது பார் கவுன்சில் இந்தியா விதிகளுக்கு முரணானது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com