எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு! 

சட்டசபையில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் அதிமுக அரசின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக   வாக்களிக்க பிரதான எதிர்கட்சியான திமுகவும், காங்கிரசும் முடிவெடுத்துள்ளன. 
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு! 

சென்னை: சட்டசபையில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் அதிமுக அரசின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக   வாக்களிக்க பிரதான எதிர்கட்சியான திமுகவும், காங்கிரசும் முடிவெடுத்துள்ளன. 

ஆளுநர் அழைப்பு விடுத்ததின் பேரில் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் 13- ஆவது முதல்வராக நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் 15 நாட்களுக்குள் தனது தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என்றும் தெரிவிக்கபட்டிருந்தது.

ஆனால் சனிக்கிழமை அன்று சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்படும் என்று நேற்று மாலை அறிவிப்பு வெளியானது.

அதன் தொடர்ச்சியாக சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் யாருக்கு வாக்களிப்பது என்பதைமுடிவு செய்ய திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டமானது முறையே அண்ணா அறிவாலயம் மற்றும் சத்தியமூர்த்தி  பவனில் இன்று மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில் ஆளும் அதிமுக அரசின் முதல்வர் எடபபடி பழனிசாமிக்கு எதிராக   வாக்களிக்க திமுகவும், காங்கிரசம் முடிவெடுத்துள்ளன. 

காங்கிரசின் முடிவை அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் சமூக வலைத்தளமான டிவிட்டரில் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com