தமிழக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமது பெரும்பான்மையை பேரவையில் 15 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என்று நேற்று ஆளுநர் உத்தரவிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமது பெரும்பான்மையை பேரவையில் 15 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என்று நேற்று ஆளுநர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். இதற்காக பேரவை நாளை 11 மணிக்கு கூடுகிறது என்று பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சபாநாயகர் தனபால் நாளை காலை 11 மணிக்கு சட்டப்பேரவையை கூட்டியுள்ளார்.

அப்போது, தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சரவை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என்று ஜமாலுதீன் குறிப்பிட்டுள்ளார். பேரவை கூடியதும், அமைச்சரவை மீதான நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்மொழிவார். இந்தத் தீர்மானம் வழிமொழியப்பட்டு அது வாக்கெடுப்புக்கு விடப்படும்.

பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு இடையே நடைபெறும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் என்பதால் குரல் வாக்கெடுப்புக்குப் பதிலாக எண்ணிக் கணிக்கும் முறையே பின்பற்றப்படும் என்று சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிப்பாரா என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com