தூத்துக்குடி, மதுரைக்கு சிறப்பு ரயில்

தூத்துக்குடி, மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தூத்துக்குடி, மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி - சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரயில்
ரயில் எண் 82606: பிப்ரவரி 26-ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல் - மதுரை சிறப்புக் கட்டண ரயில் ரயில் எண் 06932: பிப்ரவரி 26 ஆம் தேதியன்று சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு மதுரை சென்றடையும்.
இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com