பவுனுக்கு ரூ.248 அதிகரிப்பு

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.248 அதிகரித்து, வியாழக்கிழமை ரூ.22,648 ஆக விற்பனையானது.

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.248 அதிகரித்து, வியாழக்கிழமை ரூ.22,648 ஆக விற்பனையானது.
பங்குச் சந்தையில் வீழ்ச்சி, இந்திய ரூபாய் மீதான மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம், வெள்ளி விலை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 அதிகரித்து ரூ.2,831-க்கு விற்பனையானது. இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 40 பைசா அதிகரித்து ரூ.46.50 ஆகவும், ஒரு கட்டி வெள்ளி ரூ.370 அதிகரித்து ரூ.43,480-ஆகவும் விற்பனையானது.
வியாழக்கிழமை விலை நிலவரம்
(ரூபாயில்):
ஒரு கிராம் தங்கம் 2,831
ஒரு பவுன் தங்கம் 22,648
ஒரு கிராம் வெள்ளி 46.50
ஒரு கிலோ வெள்ளி 43,480

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com