அவை முன்னவராக செங்கோட்டையன்

சட்டப் பேரவையின் முன்னவராக மூத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவை முன்னவராக செங்கோட்டையன்

சட்டப் பேரவையின் முன்னவராக மூத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக சட்டப் பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், "கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத் துறை அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு சட்டப் பேரவையின் முன்னவராக நியமிக்கப்பட்டுள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.
முக்கியப் பணி: முதல்வர் இல்லாத தருணங்களில் பேரவையில் ஏதேனும் ஒழுங்கு பிரச்னைகளோ அல்லது சட்டப் பேரவையில் கூச்சல்-குழப்பங்களோ ஏற்பட்டால் அதனை முறைப்படுத்தி அவையைச் சீர்பட நடத்துவது அவை முன்னவரின் பணியாகும். முதல்வரைப் போல, அவை முன்னவரும் எப்போதும் வேண்டுமானாலும், எந்தத் தருணத்திலும் குறுக்கிட்டு விளக்கங்களைத் தரலாம்.
மேலும், அவையை ஒத்திவைக்கக் கோரும் தீர்மானம் உள்பட முக்கிய தீர்மானங்களை கொண்டு வரும் பணியையும் அவை முன்னவர் மேற்கொள்வார்.
நீண்ட கால பேரவை உறுப்பினர்: அதிமுக தொடக்க கால உறுப்பினரான அவர், பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். சத்தியமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் 1977-இல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 1980, 1984, 1989, 1991, 2006, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார். அமைச்சராகவும் இருந்தவர். சட்டப் பேரவையில் அனுபவம் வாய்ந்தவர்.
1989-ம் ஆண்டில் ஜெயலலிதா அணியில் இருந்த இவர் கோபி தொகுதியில் அதிமுக (ஜெயலலிதா பிரிவு) வேட்பாளராக சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com