அவையில் நடந்தது என்ன..? மு.க.ஸ்டாலின் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கான பேரவை
அவையில் நடந்தது என்ன..? மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கான பேரவை சிறப்புக்கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது இதில் 230 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.  

ரகசிய வாக்கெடுப்பை வலியுறுத்தி சபாநாயகரை முற்றுகையிட்டு கடும் ரகளையில் திமுக உறுப்பினர்கள் ஈடுபட்டு வந்தனர். எதிர்கட்சி உறுப்பினர்களின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், காகிதங்களைக் கிழித்தெறிந்தும் மேசையின் மீதும் இருகைகளையும் தட்டி ஒலி எழுப்பினர். நம்பிக்கை வாக்கெடுப்பினை வேறொரு நாளில் நடத்தவும், ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தவும் கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். திமுக உறுப்பினர் பூங்கோதை மேசையின் மீதேறி கோஷங்களை எழுப்பினர்.

சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டதுடன் அவரது இருக்கையும் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவையிலிருந்து சபாநாகர் தனபால் வெளியேறினார்.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை அழைத்து பேசினார். அப்போது, நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக தெரிவித்துக்கொண்ட ஸ்டாலின், ரகசிய வாக்கெடுப்பை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சட்டப்பேரவையின் மாண்புகளை சீர்குலைத்ததால் திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தனபால் கூறினார். திமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றப்படும்போது திமுக உறுப்பினர்களும், அவைக் காவலர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில், திமுக உறுப்பினர்களும், அவைக் காவலர்களுமக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திமுக உறுப்பினர்களை வெளியேற்ற முடியாமல் அவைக்காவலர்கள் திணறினர். சபாநாயகர் இருக்கையை இரண்டாவது முறையாக முற்றுகையிட்டு திமுகவினர் கோஷங்களை எழுப்பினர். சபாநாயகரின் மைக் 2வது முறையாக உடைக்கப்பட்டது. அமைச்சர்களின் மீது திமுக உறுப்பினர்கள் ஏறி நின்று ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி தொடர்ந்து முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். மீண்டும் தொடர்ந்து அமளி ஏற்பட்டதால் பேரவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைப்பட்டது.

மீண்டும் அவை கூடும்போது திமுக உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால், அவர்கள் அவையை விட்டு வெளியே வராமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவையை விட்டு வெளியே வராமல் உள்ளிருப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வந்த திமுக உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், நந்தகுமார், சேகர்பாபு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் ஒவ்வொருவராக வலுக்கட்டாயமாக வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சபாநாயகர் தன்னுடை சட்டையை தானே கிழித்துக்கொண்டு வேண்டும் என்றே எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார். இதைத்தொடர்ந்து பேரவையில் என் மீதும் தாக்குதல் நடத்தியும், சட்டையை கிழித்தனர், கட்சி உறுப்பினர்களும் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறினார்.

இதுகுறித்து சம்பவம் குறித்து ஆளுநரிடம் முறையிடப்போவதாக கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com