ஆளுநர் வித்யாசாகருடன், மு.க. ஸ்டாலின் சந்திப்பு

ஆளுநர் வித்யாசாகருடன், மு.க. ஸ்டாலின் சந்திப்பு

ஆளுநர் வித்யாசாகரை சந்தித்து தாங்கள் தாக்கப்பட்டது குறித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முறையிட்டார்.

ஆளுநர் வித்யாசாகரை சந்தித்து தாங்கள் தாக்கப்பட்டது குறித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முறையிட்டார்.

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பானி பழனிசாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் தனபால் அதை நிராகரித்துவிட்டார். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனால் அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது மு.க. ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் சிலர் தாக்கப்பட்டதாகவும், இதில் ஸ்டாலின் சட்டை கிழிந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சட்டசபையிலிருந்து கிழிந்த சட்டையுடன் வெளியே வந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அங்கிருந்து நேராக சென்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் தாக்கப்பட்டது குறித்து அவர் ஆளுநரிடம் புகார் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com