உ.வே.சா.வுக்கு நினைவு இல்லம் அமைப்பதில் அரசு அலட்சியம்

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யருக்கு நினைவு இல்லம் அமைக்கும் விவகாரத்தில், தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உ.வே.சா.வுக்கு நினைவு இல்லம் அமைப்பதில் அரசு அலட்சியம்

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யருக்கு நினைவு இல்லம் அமைக்கும் விவகாரத்தில், தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழுக்கு தொண்டாற்றுவதற்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட உ.வே.சா. அவர், அழியும் நிலையில் இருந்த சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, நெடுநல்வாடை உள்ளிட்ட 90 -க்கும் மேற்பட்ட இலக்கிய ஓலைச்சுவடிகளை புத்தகங்களாக தொகுத்து தமிழ் சமுதாயத்துக்கு பரிசளித்தவர்.
தன் வாழ்நாளின் கடைசி நிமிஷம் வரை 68 ஆண்டுகளை ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து பதிப்பிக்கும் பணிக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார். உ.வே.சா.வின் 162 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை மாநிலக் கல்லூரியில் உ.வே.சா. பணியாற்றியபோது திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியேறினார். பின்னர் அந்த வீட்டை விலைக்கு வாங்கி வாழ்ந்தார்.
அவரது மறைவுக்குப் பிறகு அவரது வாரிசுகள் அந்த வீட்டை தனியாருக்கு விற்றுவிட்டனர். அந்தக் கட்டடத்தை வாங்கியவர்கள் அதைத் தரைமட்டமாக்கியதுடன், அதே இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளையும் கட்டிவிட்டனர் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com