சட்டசபையில் கடும் ரகளை: செயலர் இருக்கை கிழிப்பு; மைக் உடைப்பு; சபை ஒத்திவைப்பு! 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கூடிய சட்டசபை கூட்டத்தில் கடும் ரகளை ஏற்பட்டது. இருக்கை கிழிப்பு, மைக் உடைப்பு சம்பவங்கள் அரங்கேறியதால் சபை மதியம் ஒரு மணி... 
சட்டசபையில் கடும் ரகளை: செயலர் இருக்கை கிழிப்பு; மைக் உடைப்பு; சபை ஒத்திவைப்பு! 

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கூடிய சட்டசபை கூட்டத்தில் கடும் ரகளை ஏற்பட்டது. இருக்கை கிழிப்பு, மைக் உடைப்பு சம்பவங்கள் அரங்கேறியதால் சபை மதியம் ஒரு மணி வரைக்கும்  ஒத்தி வைக்கபட்டது.

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.அதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு  நடத்த வேண்டும் என்று கோரியும், அதிமுக எம்.எல்.ஏக்கள் மக்களின் கருத்தை கேட்ட பின்பு  மற்றொரு நாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான  திமுக, பன்னீர்செல்வம் அணி  மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூச்சல் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

ஆனால் இதனை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டதால் சபையில் கடுமை அமளி உண்டானது. திமுக  ஆலங்குளம் எம் .எல்.ஏ வான முன்னாள் அமைச்சர் பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று வாக்குவாதம் செய்தார். அத்ததுடன் சட்டசபை செயலர் ஜமாலுனின் இருக்கை கிழிக்கப்பட்டது. அவரது மேஜையில் இருந்த பேப்பர்கள் கிழிக்கப்பட்டு வீசப்பட்டது.

இந்த அமளியில் இடையே  சபாநாயகர் தனபால அவையை 45 நிமிடங்கள் ஒத்தி வைத்து விட்டு  பாதுகாவலர்கள் புடைசூழ பத்திரமாக வெளியேறினார்.   

பின்னர் மற்றொரு திமுக உறுப்பினரான கு.க.செல்வம் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து குரல் எழுப்பினார். இதன் காரணமாக அமளி தொடர்ந்த வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com