சட்டசபையில் ஸ்டாலின் தரையில் அமர்ந்து தர்ணா!

சட்டசபையிலிருந்து திமுக உறுப்பினர்கள்  வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தரையிலமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சட்டசபையில் ஸ்டாலின் தரையில் அமர்ந்து தர்ணா!

சென்னை: சட்டசபையிலிருந்து திமுக உறுப்பினர்கள்  வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தரையிலமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இன்று கூடிய சட்டசபை கூட்டத்தில் கடும் ரகளை ஏற்பட்டது. இருக்கை கிழிப்பு, மைக் உடைப்பு சம்பவங்கள் அரங்கேறியதால் சபை மதியம் ஒரு மணி வரைக்கும்  ஒத்தி வைக்கபட்டது.பின்னர் மீண்டும் கூடிய பொழுதும் அசாதாரண சூழ்நிலை நிலவியதால் மீண்டும் சபை மூன்று மணி வரைக்கும் ஒத்திவைக்கபப்ட்டது.

இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்படி போராடியவர்களில் மா.சுப்ரமணியன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேகர்பாபு உள்ளிட்ட 20 உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக அவைக்காவலர்களால் வெளியேற்றபட்டனர்.

சபாநாயகரின் இந்த நடவடிக்கையைக்  கண்டித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தரையிலமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதே சமயம்  வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள் பேரவைக்கு செல்லும் வழியிலமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com