சாஸ்த்ரா பல்கலை.யில் ராமானுஜாசார்யா கருத்தரங்கம்

ஸ்ரீ ராமானுஜாசார்யாவின் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ராமானுஜாசார்யா குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கத்தில் மாணவருக்குப் பரிசு வழங்குகிறார் முனைவர் எம்.ஏ. வெங்கடகிருஷ்ணன்.
கருத்தரங்கத்தில் மாணவருக்குப் பரிசு வழங்குகிறார் முனைவர் எம்.ஏ. வெங்கடகிருஷ்ணன்.

ஸ்ரீ ராமானுஜாசார்யாவின் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ராமானுஜாசார்யா குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், புகழ்பெற்ற அறிஞர்கள் வில்லூர் வி.எஸ். கருணாகரசார்யா, முனைவர் எஸ். பத்மநாபன், எம்.ஏ. வெங்கடகிருஷ்ணன், பத்திரிகையாளர் மைபா நாராயணன், சாஸ்த்ரா பல்கலைக்கழகக் கீழ்திசைக் கல்வித் துறைத் தலைவர் என். கண்ணன் ஆகியோர் பேசினர். இலக்கியம், தத்துவம், சமூகம், மக்களின் வாழ்க்கை ஆகியவற்றில் ஸ்ரீராமானூசார்யா ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு குறித்து விரிவாகப் பேசினர்.
இந்தக் கருத்தரங்கத்தில், மாநில அளவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300 பேராளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர், இந்தக் கருத்தரங்கத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள திவ்ய தலங்களுக்கு வெள்ளிக்கிழமை மாலையும், சனிக்கிழமையும் செல்கின்றனர். இவர்களுக்கு திவ்ய தலங்கள் குறித்து முனைவர் எம்.ஏ. வெங்கடகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் - வேந்தர் எஸ். ராமச்சந்திர ஐயரின் நூற்றாண்டு விழாவையொட்டி, பாரம்பரிய கலாசாரம், முன்னோர்கள் பின்பற்றி வந்த வழக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கடந்த இரு மாதங்களாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான திருப்பாவை, திருவெம்பாவை, பகவத்கீதை, திவ்ய பிரபந்தம் ஆகியவை குறித்த போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் சுமார் ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு கலாசார, ஆன்மிக வகுப்புகளில் பங்கேற்ற சாஸ்த்ரா மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, இந்தக் கருத்தரங்கத்தில் அவர்களுடைய பங்கேற்பு அளவிலான அடிப்படையில் ரூ. 50,000, ரூ. 25,000 கல்வி உதவித்தொகை, தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இதில், 100 மாணவர்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com