சென்னை உயர் நீதிமன்ற தாற்காலிக தலைமை நீதிபதி பொறுப்பேற்பு

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ், பொறுப்பு தலைமை நீதிபதியாக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ், பொறுப்பு தலைமை நீதிபதியாக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கௌல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், தாற்காலிகமாக பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1957-ஆம் ஆண்டு, மே 20-ஆம் தேதி பிறந்த இவர், 1981-ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார். அதன் பின்னர், கடந்த 1993-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் மாவட்ட நீதிபதியாக நீதித்துறைப் பணிகளை தொடங்கினார். 2003-ஆம் ஆண்டு கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2015-இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு (2016) ஏப்ரல் 11-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகளில் ஒருவராக இருக்கும் ஹூலுவாடி ஜி.ரமேஷ், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நிரந்தர தலைமை நீதிபதி ஒருவரை குடியரசு தலைவர் நியமிக்கும் வரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஹுலுவாடி ஜி.ரமேஷ் தொடருவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com