சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பைக் கொண்டாட திமுகவுக்கு மட்டும்தான் தகுதி

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கிடைத்திருக்கிற நியாயமான தீர்ப்புக்கு உரிமை கொண்டாடக்கூடிய தகுதி திமுகவுக்கு மட்டும்தான் உள்ளது என்றார் அதன் பொதுச் செயலர் க.அன்பழகன்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பைக் கொண்டாட திமுகவுக்கு மட்டும்தான் தகுதி

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கிடைத்திருக்கிற நியாயமான தீர்ப்புக்கு உரிமை கொண்டாடக்கூடிய தகுதி திமுகவுக்கு மட்டும்தான் உள்ளது என்றார் அதன் பொதுச் செயலர் க.அன்பழகன்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், மேலும் பேசியது: தமிழர்களுக்காக, நியாயத்துக்குப் போராடும் கட்சியாக திமுக மட்டுமே உள்ளது. திமுகவைப் போல் முற்போக்கு திட்டங்களை தரும் கட்சி ஏதும் இல்லை. 10, 20 ஆண்டுகளுக்கு முன்னால் குறைகூறியவர்கள் எல்லாம் திமுக தமிழர்களுக்காகப் பாடுபடும் கட்சி என்பதை இப்போது ஏற்றுக்கொண்டுள்ளனர்.
திமுக இல்லையென்றால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நியாயம் கிடைத்திருக்காது. இந்த வழக்கில் கிடைத்திருக்கிற நியாயமான தீர்ப்புக்கு உரிமை கொண்டாடாடக்கூடிய தகுதி, திமுகவுக்கு மட்டுமே உள்ளது. இந்த வழக்கில் ஏற்பட்ட முடிவு எவ்வளவு நியாயமானது என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மக்கள் தெளிவில்லாமல் இருந்ததால்தான் கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. கருணாநிதி சொல்வது நியாயமா, ஜெயலலிதா சொல்வது நியாயமா என்பதை மக்கள் சிந்திக்கவில்லை. அதன் விளைவு தான் இப்போது தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள நிலை. இதனால் தமிழக மக்கள் முழு மனதோடு அதிமுக என்ற கட்சியையும், ஆட்சியையும் தூக்கியெறிய உதவ வேண்டும். தமிழக மக்களுக்கு திமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் மக்களுக்குப் பணியாற்றக்கூடியக் கட்சியாக இல்லை என்றார்.
இதில் திமுக துணைப் பொதுச் செயலர் வி.பி.துரைசாமி, நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பார்.இளங்கோவன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.காந்திசெல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com