ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை: விரைவில் பொதுமக்களிடம் விசாரணை: விசாரணைக் குழு நீதிபதி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்து, விரைவில் பொதுமக்களிடம் விசாரணை நடத்தப்படும் என ஒரு நபர் விசாரணைக் குழு தலைவர் நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுப் போராட்ட வன்முறை குறித்து விசாரணை நடத்த மதுரைக்கு வெள்ளிக்கிழமை வந்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தல்லாகுளம் பகுதியை பார்வையிட்டபோது, அவரிடம் விளக்கமளிக்கிறார் மாநகர காவல்துறை ஆணையர் ச
ஜல்லிக்கட்டுப் போராட்ட வன்முறை குறித்து விசாரணை நடத்த மதுரைக்கு வெள்ளிக்கிழமை வந்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தல்லாகுளம் பகுதியை பார்வையிட்டபோது, அவரிடம் விளக்கமளிக்கிறார் மாநகர காவல்துறை ஆணையர் ச

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்து, விரைவில் பொதுமக்களிடம் விசாரணை நடத்தப்படும் என ஒரு நபர் விசாரணைக் குழு தலைவர் நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி, தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம், தமிழகம் முழுவதும் பரவியது. ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்த பிறகும், போராட்டம் நீடித்தது.
ஜனவரி 23ஆம் தேதி போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் கூறியபோது வன்முறை நிகழ்ந்தது. இந்த வன்முறை குறித்து விசாரணை நடத்த, நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் சென்னை, சேலம், கோவை ஆகிய நகரங்களில் போராட்டம் குறித்து விசாரணை நடத்தியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, மதுரைக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர், இங்கு போராட்டம் நடைபெற்ற தமுக்கம் மைதானம், ரயிலை சிறை பிடித்த செல்லூர் வைகை பாலம், மதுரை ரயில் நிலையம், அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதி மற்றும் வாடிவாசலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக விரைவில் பொதுமக்களிடமும் விசாரணை நடத்தப்படும். விசாரணை நடைபெறும் இடம், தேதி தொடர்பான விவரங்கள் விரைவில் நாளிதழ்கள் மூலம் தெரிவிக்கப்படும். அப்போது பொதுமக்கள் நேரில் மனுக்களை அளிக்கலாம். சென்னை பசுமை வழிச் சாலையில் விசாரணைக் குழு அலுவலகம் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் 15 நாள்களில் முழுமையான விசாரணை தொடங்கும் என்றார்.
இந்த விசாரணையின்போது, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ், மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ் குமார் யாதவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஆர். சக்திவேல், மாநகரக் காவல் துணை ஆணையர்கள் அருண் சக்தி குமார், ஏ.ஜி.பாபு, மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஜி. செந்தில்குமாரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com