நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி!

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளதை அடுத்து எடப்பாடி பழனிசாமி அரசு
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளதை அடுத்து எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

மிகுந்த சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்குப் பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால், அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்காக சட்டப்பேரவை வளாகம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

சசிகலா ஆதரவாளரான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றது. 15 நாள்களுக்குள் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த 11 நாட்களாக கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுத்தியில் தங்கவைக்கப்பட்டிருந்த இருந்த 122 எம்.எல்.ஏ.,க்கள் இன்று போலீஸ் பாதுகாப்புடன் பேரவைக்கு அழைத்து வரப்பட்டனர். .

இன்று சனிக்கிழமை காலை 11 மணிக்கு பேரவை கூடியது. அப்போது, வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்தார்

ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி திமுக, காங்கிரஸ், பன்னீர்செல்வம் அணியினர் கோரிக்கை வைத்து பேரவையால் அமளியில் ஈடுப்பட்டனர். 

சபாநாயகர் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து பேரவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.

திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளியேறினார்.

இதையடுத்து எதிர்க்கட்சியினர் இல்லாமல் குரல்வாக்கெடுப்பு நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.

இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக 11 எம்எல்ஏக்கள் வாக்குகள் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தேதிக்குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com